கோயம்புத்தூர்

அரசிதழ் வந்தாச்சு; அமலாக்கம் எப்போது?:மனைகள் அங்கீகாரத்தில் தொடரும் குளறுபடி!

கோவை, ஜூன் 25: அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு தடை விதிப்பதற்கான அரசிதழ் வெளியாகி நாள்கள் பல கடந்தாலும், அமல்படுத்த முடியாத நிலை தொடருகிறத

சிவ. மணிகண்டன்

கோவை, ஜூன் 25: அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு தடை விதிப்பதற்கான அரசிதழ் வெளியாகி நாள்கள் பல கடந்தாலும், அமல்படுத்த முடியாத நிலை தொடருகிறது.

 நகரமயமாக்கல் காரணமாக புறநகரப் பகுதி விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையான அனுமதியைப் பெறுவதில்லை.

 அரசு வழிகாட்டுதலின்படி மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு அதற்கான அங்கீகாரத்தை உள்ளாட்சிகளிடம் பெறுவது அவசியம். குறிப்பாக, ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளில் பெரும்பகுதி இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவதில்லை. இதுபோன்ற வீட்டுமனைகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும்போது, மனைகள் அங்கீகாரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

 அங்கீகாரம் உள்ளதா என்பதை அறியாமலேயே பலரும் மனைகளை வாங்கி விடுகின்றனர். இத்தகைய மனைப் பிரிவுகளுக்கு உள்ளாட்சிகளால் எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்க முடியாது. அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிக்கும் கணிசமான மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாதது, மக்கள் பிரதிநிதிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வந்தது.

 அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள் பிரச்னை கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கிடையே மனைகளை வரன்முறை செய்வதற்கான பொதுத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 90 சதவீத அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள் வரன்முறை செய்யப்பட்டுள்ளன.

 இந்நிலையில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், இனி அதுபோன்ற மனைப்பிரிவுகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

 இதன் தொடர் நடவடிக்கையாக அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இதற்கான அரசிதழ் கடந்த மார்ச் 4-ம் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த உத்தரவு பதிவுத் துறையால் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

 இதனால், அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகள் பதிவு செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுஒருபுறம் இருக்க, சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வதை மட்டுமே வைத்துக் கொண்டு, இடைத்தரகர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி அங்கீகாரம் பெறாத மனைகளை விற்பனை செய்கின்றனர்.

 இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதற்கான தடை குறித்து அரசாணை எதுவும் இதுவரை வரவில்லை' என்கின்றனர்.

 ""அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்யக் கூடாது என்பதற்கு அரசிதழ் வெளியிடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை.

 இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இதுகுறித்து கேட்டதற்கு, அரசாணை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்கிறார் கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன்.

 ஆனால், தற்போது எவ்வித தடையும் இல்லாமல் அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்யப்படுகின்றன. அரசிதழ் வெளியான நாளுக்குப் பிறகு பதிவு செய்தவை செல்லாது என்பதற்குக் கூட வாய்ப்புள்ளது.

 ஆகவே, அரசு உத்தரவை விரைவில் வெளியிடுவதோடு, பொதுமக்களுக்கு இதுகுறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT