கோவை மாவட்ட அரசு பள்ளிகளில்வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவி முதலிடம்
பிளஸ் 2 தேர்வில் கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்து, காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவி ஆர்.சுவேதா சாதனை படைத்துள்ளார்.கோவை, பொள்ளாச்சி வருவாய் மாவட்டங்களில் உள்ள 71 அரசு பள்ளிகளில் 100 சத
பிளஸ் 2 தேர்வில் கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்து, காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவி ஆர்.சுவேதா சாதனை படைத்துள்ளார்.
கோவை, பொள்ளாச்சி வருவாய் மாவட்டங்களில் உள்ள 71 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளி என்ற பெருமையையும் இப்பள்ளி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் 69 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
1200-க்கு 1163 மதிப்பெண் எடுத்த முதல் மாணவியான சுவேதா பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-193, ஆங்கிலம்-184, இயற்பியல்-191, வேதியியல்-198, கணிதம்-198, கணினி அறிவியல்-199.
இதே பள்ளியை சேர்ந்த ஜி.சுரேந்திரன் 1133 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாமிடத்தையும், எஸ்.கார்த்திக் 1124 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
பொறியியலில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் கற்பதே தனது இலட்சியம் என்று கூறுகிறார் சுவேதா.
மாணவி சுவேதாவை பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர்கள் அருள்சிவா, சாக்ரடீஸ் குலசேகரன், மகேஸ்வரி, வசந்தாமணி உள்பட பலர் பாராட்டினர்.