கோயம்புத்தூர்

மணி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தினமணி

கோவை மணி மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சூலூரில் உள்ள தனியார் தீம் பார்க்கில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், 1983-85 ஆம் ஆண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்ற 260 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 120 பேர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பாளர் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் வேலு கூறியது: முன்னாள் மாணவர்கள் சார்பில், சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளியைப் பற்றி குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற குடும்பக் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT