பறவைகளை கணக்கெடுத்து இயற்கையை பாதுகாக்க அழைப்பு
நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு வரும் 14ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து, கணக்கெடுப்பில் பொதுமக்கள்
நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு வரும் 14ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து, கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்க இயற்கை பாதுகாப்பு கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் பறவைகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சிட்டுக்குருவி உள்ளிட்ட பெரும்பாலான பறவை இனங்கள் அழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பறவைகள் அழிந்து வருவதாக கூறப்படுவதால், இதற்கு முன்பு எத்தனை பறவைகள் இருந்தன என்றால் அதை யாராலும் கூற முடியாது. அதற்கு காரணம், நம்மிடையே பறவைகளின் எண்ணிக்கை துல்லியமாக இல்லை.
வனப்பகுதிகளில் மட்டுமே வன விலங்குகளின் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், மனிதர்கள் வசிக்கும் பகுதிகள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பறவைகள் பரவிக் காணப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுவது என்பது கடினமான காரியம். ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தினால் நாடு முழுவதும் கணக்கிட முடியாது.
Advertisement
ஆகவே இதில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் மிக அவசியமானதாக உள்ளது.
வரும் 14ஆம் தேதிமுதல் 17ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் பங்கேற்று, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பறவைகளை கணக்கெடுப்பு நடத்தவேண்டும். இதற்காக தாங்கள் உள்ள பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர வேண்டிய அவசியம் இல்லை. வீட்டின் அருகிலும், பணிபுரியும் இடத்தின் அருகிலும் இருந்துகொண்டே அந்தப் பகுதிகளில் தென்படும் அனைத்து வகையான பறவைகளையும் கணக்கெடுப்பு நடத்தலாம். குறைந்தது 15 நிமிடங்களாவது தங்கள் பகுதியில் உள்ள பறவைகளை கவனித்து தகவல்கள் சேகரிக்க வேண்டும். இதன் மூலமாக இந்த ஆண்டு எத்தனை பறவைகள் நாட்டில் உள்ளன என்பதும், எந்தப் பகுதிகளில் பறவைகள் உள்ளன என்பதும் தெரியவரும்.
அடுத்த ஆண்டு இதேபோன்று கணக்கெடுப்பு நடத்தும்போது பறவைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதையும் கணக்கிட முடியும். முக்கியமாக, இந்த ஆண்டு பறவைகளைப் பார்த்த இடங்களில் அடுத்த ஆண்டு பார்க்க முடியாவிட்டால் அதை வைத்து அந்த குறிப்பிட்ட பகுதியில் ஆராய்ச்சி நடத்தி பறவைகள் குறைந்துள்ளதற்கான காரணங்களைக் கண்டறிய முடியும்.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் உள்ள பறவைகளைப் பற்றிய தகவல்களை கணக்கெடுப்பு நடத்தினால், அது நம் நாட்டு பறவைகளை காப்பதற்கும், இயற்கை வளங்களை காப்பதற்கும் உதவியாக இருக்கும். பறவை இனங்கள் அழிவை நோக்கிச் செல்வதால் அது மனித இனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துபவர்கள்
அதன் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ங்க்ஷண்ழ்க்.ர்ழ்ஞ் என்ற வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும்.
தாங்கள் பார்த்த பகுதியின் மாநிலம், பார்த்த இடம், பார்த்த நேரம், பார்த்த பறவையின் வகை, எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். தகவல்கள் உண்மையானதாக இருத்தல் வேண்டும்.
இது குறித்து பறவைகள் ஆராய்ச்சியாளரும், இயற்கை பாதுகாப்பு கழகத்தின் ஆராய்ச்சியாளருமான ஜெகநாதன் கூறியது: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் முக்கியமான நாடுகளில் இந்த கணக்கெடுப்பு இதே தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியம் என்றார்.