முகப்பு
கோயம்புத்தூர்

முடங்கிய சூலூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

இந்தியாவிலேயே முதன் முறையாக பேரூராட்சி அளவில் சூலூரில் தொடங்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 ஆண்டுகளாக

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:34 AM
பகிர்:

இந்தியாவிலேயே முதன் முறையாக பேரூராட்சி அளவில் சூலூரில் தொடங்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது. இதை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் திட, திரவக் கழிவுகளை அகற்றுவது மிகுந்த சவாலான விஷயமாக உள்ளது. கழிவுகளை அகற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இதில், சூலூர் பேரூராட்சியில் கழிவு நீரை சுத்திகரித்து அதை அங்குள்ள குளத்தில் விடும் பணிக்காக உலக வங்கியின் நிதி ரூ.20.40 லட்சம், அரசின் மானியம் ரூ.15 லட்சம், சூலூர் பேரூராட்சியின் பங்கு ரூ.5.40 லட்சம் என மொத்தம் ரூ.40.80 லட்சத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் 27-12-2003-இல் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில்,  இத்திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ளது.

இதுகுறித்து சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சூ.ரா.தங்கவேலு கூறியதாவது:

இந்தக் கழிவு நீர் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு, சூலூர் குளத்து நீர் மிகவும் மாசடைந்து காணப்பட்டது. சுத்திகரிப்புத் திட்டம் செயல்படுத்திய பிறகு இக்குளத்தில் மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரை குளத்தில் சேமித்து வைத்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்தக் கழிவுநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சூலூர் பேரூராட்சித் தலைவர் தங்கராஜ் கூறுகையில்,

"இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் விதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டு பொதுப் பணித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →