கோயம்புத்தூர்

பெரிய தடாகம் வனப் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

DIN

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள பெரிய தடாகம் வனப் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு வனத் துறையினர் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

பெரிய தடாகம் வனப் பகுதியில் யானை விழுந்து கிடப்பதாக கோவை வனச் சரக வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கோவை வனச் சரகர் பிரபா தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, வனத் துறை கால்நடை மருத்துவர் மனோகரன் வரவழைக்கப்பட்டு யானை பரிசோதிக்கப்பட்டது. இருப்பினும், மதியம் வரை யானையால் எழுந்து நிற்கமுடியவில்லை. இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையைத் தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் யானையால் நிற்கமுடியவில்லை. கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு  படுத்து கிடக்கும் யானையை சங்கிலியால் பிணைத்து தூக்கி நிறுத்த முயன்றனர்.

ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், மாலை நெருங்கியதையடுத்து, வனப் பகுதிக்குள் இருந்து சம்பவ இடத்துக்கு யானைகள் வரத் தொடங்கின.

இதையடுத்து, வனத் துறையினர் யானைக்கு சிகிச்சையளிக்கும் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பினர்.

இதுகுறித்து வனச் சரகர் பிரபா கூறியதாவது:

30 வயது மதிக்கத்தக்க இந்தப் பெண் யானைக்கு அஜீரணக் கோளாறு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சோர்வாலும், சக்தியின்மையாலும் அதனால் எழுந்து நிற்கமுடியவில்லை. பழங்கள், வாழை உள்ளிட்டவைகளையும் அது சாப்பிட மறுத்துவிட்டது.  இரவு நேரமாகிவிட்டதாலும், வனத்தின் இருந்து யானைகள் அப்பகுதிக்கு வரத் தொடங்கியதாலும் மீட்புப் பணியைத் தொடரமுடியவில்லை. மீண்டும், வியாழக்கிழமை யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடரும் என்றார்.

இதேபகுதியில், வாய்ப் பகுதியில் ஏற்பட்ட புண் காரணமாக கடந்த மாதம் குட்டி யானை ஒன்று உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT