கோயம்புத்தூர்

நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: மதிமுக

DIN

கோவை மாநகராட்சி சார்பில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக மதிமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் வெளியிட்ட அறிக்கை:
கோவை மாநகராட்சி சார்பில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-18-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பயன்படும் எவ்வித புதுத் திட்டமும் இடம்பெறவில்லை. மாறாக மாநகரில் நிலவிவரும் கொசுத் தொல்லை, பாதாளச் சாக்கடை தூர்வாராதது, டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு என சுகாதாரச் சீர்கேடுகள் நிலவி வருகிறது.
நீண்ட நாள்களாக நிலவிவரும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்தவில்லை. பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்றவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். எனவே, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பயன்பெறும் வகையில் எவ்வித புதிய திட்டங்களும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT