மதுக்கரை அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்
மதுக்கரை அருகே அய்யர் காடு பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புதன்கிழமை அதிகாலை நுழைந்த 2 யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தின.
கோயம்புத்தூர்மதுக்கரை அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்
மதுக்கரை அருகே அய்யர் காடு பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புதன்கிழமை அதிகாலை நுழைந்த 2 யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தின.
மதுக்கரை அருகே அய்யர் காடு பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புதன்கிழமை அதிகாலை நுழைந்த 2 யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தின.
கோவையை அடுத்த மரப்பாலத்தில் அய்யர் காடு என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மதுக்கரை வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் இருந்து 2 யானைகள் வந்துள்ளன. இவை அங்குள்ள விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்தன. பின்னர் அங்கிருந்த 4 தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தின. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுக்கரை வனத் துறையினர் யானைகளை, பட்டாசு வெடித்து வனப் பகுதிக்குள் விரட்டினர். இதைத் தொடர்ந்து, அந்த யானைகள் மீண்டும் இரவு 10 மணியளவில் அப்பகுதிக்கு வந்துள்ளன.
இதற்கிடையே சுகுணாபுரம் மேம்பாலம் அருகே கோவை-பாலக்காடு சாலையைக் கடந்து ஒற்றை யானை புதன்கிழமை இரவு ஊருக்குள் புகுந்தது. இந்த யானையை விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.