கோவையில் பெயிண்டர் கொலை: சக தொழிலாளி கைது
கோவையில் பெயிண்டரை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த சக தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கோவையில் பெயிண்டரை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த சக தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் கிரிராஜ் (34). இவரது நண்பர் சக்திவேல் (35). இருவரும் கட்டடங்களுக்கு பெயிண்டிங்
அடிக்கும் வேலை செய்து வந்தனர். தொண்டாமுத்தூர் வ.உ.சி.நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு புதன்கிழமை பெயிண்ட் அடிக்கச் சென்றனராம். பின்னர், மாலை 5.30 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு வந்தனர். அப்போது ஊதியம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் கிரிராஜ், சக்திவேலைத் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அருகில் இருந்த கடப்பாரையால் கிரிராஜின் தலையில் பலமாகத் தாக்கினாராம். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய தொண்டாமுத்தூர் போலீஸார் சக்திவேலை கைது செய்தனர்.