நல்லமுடி காட்சிமுனைக்குச் செல்ல 10-ஆவது நாளாகத் தடை
யானை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால், நல்லமுடி காட்சிமுனைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யானை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால், நல்லமுடி காட்சிமுனைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து ஒரு மாதமாக அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாத் தலமான நல்லமுடி காட்சிமுனை, நீரார் அணை, சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வழித் தடங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அப் பகுதிக்குச் செல்ல வனத் துறையினர் அனுமதிப்பதில்லை.
இப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் நல்லமுடி காட்சிமுனைக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், அப் பகுதியில் யானைகள் நடமாட்டம் தினந்தோறும் இருப்பதால், தொடர்ந்து 10-ஆவது தினமாக அப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.