காரனூர் ஜெபக் கூடத்தில் இசைக் கருவிகள் திருட்டு
அன்னூர் அருகே அக்கரைசெங்கப் பள்ளி கிராமத்தில் உள்ள ஜெபக் கூடத்தில் மைக் உள்ளிட்ட இசைக் கருவிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அன்னூர் அருகே அக்கரைசெங்கப் பள்ளி கிராமத்தில் உள்ள ஜெபக் கூடத்தில் மைக் உள்ளிட்ட இசைக் கருவிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அன்னூர், அக்கரைசெங்கப் பள்ளி ஊராட்சி, காரனூர் கிராமத்தில் ஜெபக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதில், புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் பாஸ்டராக இருக்கிறார்.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஜெபக் கூடத்தில் விளக்குகள் எரியாததால் அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது, ஜெபக் கூடத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த மைக், கீபோர்டு உள்ளிட்ட இசைக் கருவிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அலுவலகப் பொருள்கள், கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி உள்ளிட்டவைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இது குறித்து பாஸ்டர் பால்ராஜ் அன்னூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.