கோயம்புத்தூர்

இலவச தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

DIN

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் இலவச தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை  நடைபெற்றது.
நாச்சிமுத்து பாலிடெக்னிக்கின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகியன இணைந்து இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதில் ஒயரிங்,  ஏசி பழுது பார்த்தல்,  காளான் வளர்ப்பு,  இருசக்கர வாகனம் பழுது பார்த்தல்,  தேங்காய் எண்ணெய் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாச்சிமுத்து பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டு உள் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார். பொள்ளாச்சி கனரா வங்கி மேலாளர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் 130 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சமுதாய மேம்பாட்டுத் திட்ட அதிகாரி நாகராஜன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT