கோயம்புத்தூர்

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

போக்குவரத்து துறையைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை போக்குவரத்து  இணை ஆணையர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மா.ரமணன் தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில், போக்குவரத்து துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது எனவும், அரசே தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனிவேலு, ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து துறை பணியாளர் சங்க மாநிலப் பிரசாரச் செயலர் இரா.நடராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT