கோயம்புத்தூர்

வெள்ளலூரில் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் உண்ணாவிரதம்

DIN

தள்ளுவண்டிக் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளலூரில் தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தக் குடியிருப்பில் நூற்றுக்கணக்கான தள்ளுவண்டி வியாபாரிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் குடியிருப்பு மற்றும் அதன் அருகே தள்ளுவண்டிகளை வைத்தும்  தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில், தள்ளுவண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்ய மாநகராட்சி அனுமதி மறுத்து, காவல் துறையினரின் உதவியுடன் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி தள்ளுவண்டி வியாபாரிகள் குடிசை மாற்று வாரியம் அலுவலகம் அருகே திங்கள்கிழமை குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தள்ளுவண்டிக் கடை மூலமாகத் தங்களது வாழ்வாதாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் காவல் துறையினரிடன் உதவியுடன் தள்ளுவண்டிகளை நிறுத்தி தொழில் செய்யக் கூடாது எனக் கூறி கடைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே தள்ளுவண்டிகளை நிறுத்தி தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT