முகப்பு
கோயம்புத்தூர்

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

கோவை  மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து கீழ்கண்ட செல்லிடப்பேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:21 am IST
பகிர்:

கோவை  மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து கீழ்கண்ட செல்லிடப்பேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 
கோவை மாவட்டக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்களில் ஆன்லைன் லாட்டரி, மணல் கடத்தல்,போலி மது விற்பனை ஆகிய செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 94458 46282 எனும் செல்லிடப்பேசி எண்ணில் புகார் அளிக்கலாம். 
 அதே வேளையில், தகவல் தருபவர்கள் எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டியதில்லை. மேலும், காவல் நிலையங்களில் பொது மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.