லாரி மோதி 28 ஆடுகள் சாவு
சின்னத் தடாகத்தையடுத்த ஆனைகட்டியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது லாரி மோதியதில் 28 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
சின்னத் தடாகத்தையடுத்த ஆனைகட்டியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது லாரி மோதியதில் 28 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
சூலூரைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், ஊர்ஊராகச் சென்று, தோட்டங்களில் பட்டி அமைத்து, தனது ஆடுகளை மேய்த்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில், ஆனைகட்டியில் மேய்ச்சலை முடித்துவிட்டு ஆடுகளுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள தொலைபேசி நிலையம் அருகே, வளைவில் வேகமாக வந்த லாரி ஆடுகளின் மீது மோதியது. இதில், 28 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதையடுத்து, கவனக்குறைவாக லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கெளதமிடம் துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.