கோயம்புத்தூர்

கேரள மக்களுக்கு  நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அங்குள்ள மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமையில் கொச்சி தமிழ்ச் சங்கம் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து இடுக்கி மாவட்டம்,  தொடுபுழா பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 
இதில், 16 டன் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டன. இப்பணியில் குறிஞ்சி மலர் பழனிசாமி, விளவை விஜயகுமார்,  அசோக்பாபு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT