கோயம்புத்தூர்

பொலிவுறு நகரம் திட்டம்: ஜெர்மன் அதிகாரிகளுடன் ஆலோசனை

DIN


கோவை மாநகராட்சி சார்பில் பொலிவுறு நகரம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஜெர்மன் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொலிவுறு நகரத் திட்டத்தில் கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நகரின் வளர்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் சாலை, திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, குளங்கள் புனரமைப்பது, சாலைப் போக்குவரத்து எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஜெர்மன் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநகரில் உள்ள 8 குளங்களை சீரமைக்கவும், குளத்தில் கழிவுநீர் கலக்காத வகையில் அந்நாட்டு நகர வளர்ச்சி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
இதேபோல மாதிரி சாலைகள், பாதுகாப்பான நடைபாதை, பாதுகாப்பான சாலைகள் என 25-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கடந்த ஆண்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜி.ஐ.இசட். என்ற அமைப்பு சார்பில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பசுமைச் சாலைகளை உருவாக்குவது, காலநிலை மாற்றம் மற்றும் நகர்புற மேம்பாடு தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் தொழில்நுட்பம் தொடர்பான ஆலோசனை அளிப்பது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இக்கூட்டத்தில் ஜெர்மன் நாட்டின் அரசுச் செயலாளர் அட்லர், மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT