முகப்பு
கோயம்புத்தூர்

பெரியநாயக்கன்பாளையத்தில்  மாணிக்க விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

பெரியநாயக்கன்பாளையம் மாணிக்கவாசக நகரில் உள்ள மாணிக்க விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பெரியநாயக்கன்பாளையம் மாணிக்கவாசக நகரில் உள்ள மாணிக்க விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை முதல்கால யாக பூஜையுடன் தொடங்கப்பட்டது. கணபதி ஹோமம் ,நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலைப் பிரவேசம், ரக்ஷாபந்தனம், தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை  இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. சகஸ்ர நாமம், தத்துவ யாகம், திரவியாஹுதி, பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. 
இதனையடுத்து விநாயகர் சிலை பிரதிஷ்டை, விமான கலசங்கள் நிறுவுதல்,  அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்காம் கால யாக பூஜை முடிவடைந்ததும், யாக சாலையிலிருந்து புனிதநீர் அடங்கிய கும்பங்கள் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.  திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்  சிவாச்சாரியார்கள் வேள்விப் பணிகளை மேற்கொண்டனர். 
கெளமார மடாலய ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், வாராஹி மந்த்ராலயத் தலைவர் மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் தலைமை ஏற்று கும்பாபிஷேகத்தை நடத்திவைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.