மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா நிரப்பிய சிகரெட்டை விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர்மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா நிரப்பிய சிகரெட்டை விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா நிரப்பிய சிகரெட்டை விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை, பீளமேடு அருகே உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கஞ்சா நிரப்பிய சிகரெட்டை சிலர் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவின் உத்தரவின்பேரில் பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, கல்லூரி அருகே உள்ள கடைக்கு அருகில் கஞ்சா நிரப்பிய சிகரெட்டை மாணவர்களுக்கு விற்பனை
செய்ததாக ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த பிரவீண் (23), ஷோபா நகரைச் சேர்ந்த கார்த்திக் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அங்குள்ள உணவகம் அருகே கஞ்சா விற்றதாக இளங்கோ நகரைச் சேர்ந்த பாபு (எ) தினேஷ் (23), வால்பாறை பன்னிமேட்டைச் சேர்ந்த அஜய்குமார் (21) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900 கிராம் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.