கோயம்புத்தூர்

ஏடிஎம் கொள்ளை வழக்கு: இஸ்லாமுதீனை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை

DIN

கோவையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட து தொடர்பாக இஸ்லாமுதீனை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 
 கோவை,  பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு ரூ.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் சேலம், நாமக்கல் அருகே தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்டு ரூ.27 லட்சத்துடன் ஹரியாணாவைச் சேர்ந்த இஸ்லாமுதீன் (34) என்பவர் தப்பியது தெரியவந்தது. 
 இதையடுத்து, ஜெய்ப்பூரில் பதுங்கிஇருந்த இஸ்லாமுதீனை தனிப் படையினர் பிப்ரவரி 2-ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இஸ்லாமுதீனிடமிருந்து ரூ.3 லட்சத்தை தனிப் படையினர் மீட்டுள்ளனர்.
இதனிடையே, இஸ்லாமுதீனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி ராஜவேலு அனுமதி வழங்கினார். இதையடுத்து, பீளமேடு காவல்துறையினர் ஏடிஎம் கொள்ளை நடந்த இடத்துக்கு இஸ்லாமுதீனை செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கருமத்தம்பட்டியில் இஸ்லாமுதீன் தங்கியிருந்த விடுதிக்கும் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT