கோயம்புத்தூர்

பயன்பாட்டுக்கு வந்தது  தூய்மை பாரதத் திட்ட கழிப்பிடம்

DIN

கோவை, காந்திபுரத்தில் செயல்படாமல் இருந்த தூய்மை பாரதத் திட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
 கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் அதிநவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. 
இந்தக் கழிப்பிடத்தை கடந்த ஆண்டு கோவை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த கழிப்பிடத்துக்கு மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால், சில நாள்களாக தண்ணீர் இல்லாததால் கழிப்பிடம் மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதால் காந்திபுரம் கழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT