கோயம்புத்தூர்

மனித, வன விலங்குகள் மோதல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

மனிதர்கள், வனவிலங்குகள் மோதலைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வால்பாறையை அடுத்த அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் முகமது சபாப், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மனிதர்கள், வனவிலங்கு மோதல்களைத் தடுப்பது குறித்த கருத்து கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது. பின்பு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து எஸ்டேட் நிர்வாகாத்தினருக்கு வனத் துறையினர் கூறியதாவது:
குடியிருப்புகள் அருகில் உள்ள புதர்கள், செடிகளை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். குடியிருப்பு அருகில் உள்ள தேயிலைச் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். முள்வேலி அமைத்து வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்கு வராதவாறு பாதுகாக்க வேண்டும். இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டாமல், குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொட்டி அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 
வனச் சரக அலுவலர்கள் சேகர், சக்திவேல், கிருஷ்ணசாமி, வால்பாறை வட்டாட்சியர் குணசேகன் உள்பட அணைத்து துறை அதிகாரிகளும், எஸ்டேட் மேலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT