கோயம்புத்தூர்

ஊரகத் திறனாய்வுத் தேர்வில் வதம்பச்சேரி பள்ளி மாணவர்கள் முதலிடம்

DIN

சூலூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஊரகத் திறனாய்வுத் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளது.
சூலுர் அருகே, வதம்பச்சேரியில் அரசு உதவி பெறும் எஸ்.சி.எம். மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த 2017 செப்டம்பர் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குரிய ஊரக திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது. இதில், கோவை வருவாய் மாவட்ட அளவில் வதம்பச்சேரி எஸ்.சி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.
கோவை மாவட்ட அளவில் இந்தத் திறனாய்வுத் தேர்வில் இப்பள்ளியில் இருந்து 27 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 14 மாணவர்கள் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ஆம் வகுப்பு முடியும் வரை ஆண்டுதோறும் ரூ. 1,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளிச் செயலாளர் எஸ்.சுகுமார், பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.மகாலிங்கம்
ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT