கோயம்புத்தூர்

மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய காவல் துறையினர்

DIN

கோவை மாவட்டக் காவல் துறை சார்பில் மலைவாழ் மக்களுடன் இணைந்து வனப் பொங்கல் விழா சாடிவயலில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டக் காவல் துறை சார்பில் மலைவாழ் மக்கள், பழங்குடியினருடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல மூன்றாவது ஆண்டாக வனப் பொங்கல் விழாவானது சாடிவயலை அடுத்த சீங்கப்பதி உண்டு உறைவிடப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கிவைத்தார். இதில், மலைவாழ் மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனத்துடன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து, கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கைப்பந்து, கபடி போன்ற பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இதில்,வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், சீங்கப்பதி, வெள்ளப்பதி உள்ளிட்ட 16 மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஊர்த் தலைவர்களுக்கு செல்லிடப்பேசிகளும், கிராம மக்களுக்குக் குடைகளும் காவல் துறை சார்பில் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT