முகப்பு
கோயம்புத்தூர்

கே.எம்.சி.எச். சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி

கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:17 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய புற்றுநோயியல் கூட்டமைப்புடன் இணைந்து நடைபெற்ற இப்பேரணி,  டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியில் இருந்து தொடங்கியது. பேரணியை மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி தொடங்கி வைத்தார். 
பேரணியில்,  பொதுமக்கள், மருத்துவர்கள், புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர் மற்றும் மாணவ, மாணவிகள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  அவர்கள் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து மாநாடு நடைபெற்றது. மாநாட்டை தொடங்கிவைத்து டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி பேசியதாவது:
உலகில் புற்றுநோய் மருத்துவத்தில் ஏற்படும் அதிநவீன மாற்றங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுவது மருத்துவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு ஆகும். பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் கவலை அளிக்கிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.  பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் எளிமையான முறையில் செய்து கொள்ள கருவிகளும், மருத்துவ வசதிகளும் உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.