முகப்பு
கோயம்புத்தூர்

குட்கா வழக்கு: திமுக எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன்

குட்கா வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சூலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

Updated On : 15 மே, 2018 at 1:04 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

குட்கா வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சூலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே, கண்ணம்பாளையத்தில் போலி குட்கா ஆலையை காவல் துறையினர் ஏப்ரல் 27-ஆம் தேதி கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, ஆலையில் வெளிப்படையான சோதனை நடத்த வேண்டும் என கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக திமுகவினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கோவை சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், சோமனூரைச் சேர்ந்த தங்கராசு உள்ளிட்டோர் தலைமைறைவாகினர்.
இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த இருவரும் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர். அவர்களை விசாரித்த நீதிபதி வேடியப்பன், மறு உத்தரவு வரும் வரை இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, சூலூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு இருவரும் கையெழுத்து இட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.