முகப்பு
கோயம்புத்தூர்

பாரதியார் பல்கலை. துறைத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் மீது முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி

Updated On : 15 மே, 2018 at 3:52 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் மீது முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கேப்டன் பிரபாகரன் திங்கள்கிழமை அளித்துள்ள மனு விவரம்:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஹரிதா செக்குண்ணி, உளவியல் துறைத் தலைவர் தவறான வார்த்தைகளால் திட்டுவதாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.