கோயம்புத்தூர்

சாலையில் நடமாடும் கால்நடைகள்:அபராதம் விதிக்க வலியுறுத்தல்

DIN

மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் கூட்டமாக நடமாடி வரும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் நடமாடி வருகின்றன. இவை, ஆற்றுபாலம் அருகே உள்ள உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ், பூண்டு மொத்த விற்பனை மண்டிகள் மற்றும் காய்கறிக் கழிவுகளைச் சாப்பிட்டு வருகின்றன. 
இந்தக் கால்நடைகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அன்னூர், உதகை,  கோத்தகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் நடுவில் படுத்து வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. 
எனவே, சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நடமாடும் கால்நடைகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT