கோயம்புத்தூர்

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கோவையில் இருந்து ரயில் மூலமாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை உணவு வழங்கல் துறை பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை, வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு வழங்கல் துறை பறக்கும் படை வட்டாட்சியர் கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து அதிகாரிகள் , சம்பவ இடத்துக்கு சென்றனர்.  அப்போது அங்குள்ள நடைமேடையில் சுமார் 15 சாக்கு மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பறக்கும் படையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஆனால், ரேஷன் அரிசியை கடத்த முயன்றது யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT