மழை வெள்ளத்தால் வால்பாறையில் வீடுகளை இழந்தோருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
வால்பாறை பகுதியில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த ஏழை மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் விரைவில் கட்டி கொடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
வால்பாறை பகுதியில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த ஏழை மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் விரைவில் கட்டி கொடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வி.அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ம.மயில் கணேசன் வரவேற்றார். கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சியை சீர்குலைக்க திமுக நினைக்கின்றது. கோஷ்டி பூசல் இன்றி செயல்படும் அதிமுகவைப் பார்த்து எதிர்க் கட்சியினர் பொறாமைபடுகின்றனர். வால்பாறை பகுதியில் மழை வெள்ளாத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் விரைவில் கட்டிக் கொடுக்கப்படும். கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுடன் நல்ல உறவு வைத்து வரும் மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற பணியாற்ற வேண்டும்.
இக்கூட்டத்தில், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், எம்.பி. சி.மகேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் ஏ.வெங்கடாசலம் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.