முகப்பு
கோயம்புத்தூர்

வாணவராயர் கல்லூரியில் உலக தென்னை தினம்

மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:30 AM
பகிர்:

மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. 
விநாயகா மற்றும் கோயமுத்தூர் தென்னை உற்பத்தியாளர்  நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  தென்னையில் சீரிய சாகுபடி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.  
கருத்தரங்கில், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன், தென்னை வளர்ச்சி வாரிய துணை இயக்குநர் பாலசுதாகரி,  தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி சுப்பிரமணியம்,  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் துறை பேராசிரியர் வெங்கடேசபழனிசாமி உள்ளிட்டோர் பேசினர். 
இதில் தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: 
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாரிக்கும் திறனை விவசாயிகள் கற்றுக்கொண்டு பயனடைய வேண்டும். 
பொள்ளாச்சி,  உடுமலை பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆனைமலை, நல்லாறு திட்ட கோரிக்கை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார். 
இந்தக் கருத்தரங்கில்,  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.