கோயம்புத்தூர்

கைத்தறி துணிகளை விசைத்தறியில் நூற்பதாக வழக்குப் பதிவு: அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விசைத்தறியாளர்கள் புகார்

DIN

சூலூரை அடுத்த சோமனூரில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத் தறியில் நெசவு செய்ததாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைத்தறிப் பிரிவு அதிகாரிகள் லஞ்சம் கேடப்பதாக விசைத்தறியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சூலூரை அடுத்த சோமனூரில் செந்தில்நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறித் துறை அதிகாரிகள் கோவை, திருப்பூர், நீலகிரி பிரிவு உதவி அமலாக்கத்துறை அதிகாரி அம்சவேணி தலைமையில் வெள்ளிக்கிழமை  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சோமனூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தேவசகாயராஜ் (45), செந்தில் நகரைச் சேர்ந்த ராஜா (48), கே.சுப்பிரமணி (54) உள்ளிட்டோரின் விசைத்தறி கூடங்களை சோதனையிட்டனர். அங்கு கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்வதாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாக கூறித் சென்றதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் தேவசகாயராஜ் என்பவர் மீது மட்டுமே புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது கிரே பருத்தி சேலை நெசவு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் கடந்த மாதம் ஜி.சுப்பிரமணி (48) என்பவர் மீது இதே பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆனால், கைத்தறி அமலாக்கத் துறை அதிகாரிகள் மாதம் ஒரு விசைத்தறி கூடத்தின் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்வதாகவும், மற்ற விசைத்தறிக் கூடங்களில் சோதனையிடும் அதிகாரிகள் அவர்களின் ஓட்டுநர்களை வைத்து  ஒரு விசைத்தறிக்கு ரூ.1000 லஞ்சம் கேட்பதாகவும் விசைத்தறியாளர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT