கோயம்புத்தூர்

போதைப் பொருள் வழக்கில் கைதான 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

DIN


வெளியூரில் இருந்து போதை ஊசி, மருந்துகளை கோவைக்கு வாங்கி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்த வழக்கில் கைதான 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து போதை ஊசி, மருந்துகளை வாங்கி வந்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக காவல் ஆணையருக்கு புகார் வரத்தொடங்கியது. இதன்பேரில் உரிய விசாரணை நடத்துமாறு காட்டூர் காவல் துறையினருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து காந்திபுரம் 2ஆவது வீதியில் கடந்த ஜூலை 24ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து போதை, ஊசி மருந்துகளை வாங்கி வந்து விற்பனை செய்ததாக கோவையைச் சேர்ந்த ஜாய் இமானுவேல் (28), முகமது ஷிகாப் (22), ஜுல்பிகர் அலி (24), முகமது அனாஸ் (24) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து போதை ஊசிகள், மருந்துகள் மற்றும் 15 காலி சிரிஞ்சுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், முகமது ஷிகாப் தனக்கு வலிப்பு நோய் இருப்பதால் பிணையில் விடுவிக்கக்கோரி நீதிமன்றத்தில் மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மருத்துவச் சான்றிதழ் போலியானது என்று தெரிந்ததால் அவரது தரப்பு வழக்குரைஞர் மற்றும் இரு அரசு மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஜாய் இமானுவேல், முகமது ஷிகாப், ஜுல்பிகர் அலி, முகமது அனாஸ் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் சனிக்கிழமை வழங்கப்பட்டதாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT