கோயம்புத்தூர்

ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக்கில் அக்டோபர் 1முதல் இலவசத் தொழிற்பயிற்சி

DIN

ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இலவசத் தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
வேலைவாய்ப்பற்ற  இளைஞர்களுக்காக பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் இந்திய அரசின் குறுகிய காலத் தொழில்திறன் எய்தும் பயிற்சி ஜி.ஆர்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 
இதில், பேப்ரிக் செக்கர், தையல் மெஷின் ஆபரேட்டர், டி.டி.எச். செட்டாப் பாக்ஸ் நிறுவுதல் மற்றும் சர்வீஸ், சி.என்.சி.ஆபரேட்டர், டர்னிங் எந்திர வரைவாளர், டர்னிங் மில்லிங் ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன்,  டேட்டா என்டரி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பு குறித்த தகவல்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 78452 04836, 79047 67166, 77080 04040 எனும் செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT