கோயம்புத்தூர்

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் நோய் பரவும் அபாயம்

DIN


மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 3 ஆவது வார்டு சீரங்கராயர் ஒடை பகுதியில் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ள கழிவுநீர் கால்வாயால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 3 ஆவது வார்டு சீரங்கராயர் ஓடை, ஷெரீப் நகர், தோல் சாப் , பாலாஜி நகர், கமலா நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்து வருகின்றனர்.  இப்பகுதிகளில் மேட்டுப்பாளையம், சிறுமுகை செல்லும் சாலையின் இடையே சீரங்கராயர் ஒடை பகுதி உள்ளது. இப்பகுதியில், உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த 8 மாதத்துக்கு மேலாக தூர்வாராமல் உள்ளதால் கால்வாயில் மண் மற்றும் குப்பைகள் நிறைந்து தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT