கோயம்புத்தூர்

கனமழைக்கு 18 வீடுகள் சேதம்: பழங்குடியின மக்கள் புகார்

DIN

கனமழைக்கு செட்டில்மென்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பழங்குடியின மக்களின் 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வால்பாறையை அடுத்துள்ள கல்லாறு செட்டில்மென்ட் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் வால்பாறை பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த கல்லாறு செட்டில்மென்ட் பழங்குடியின மக்கள் அதிகாரிகளிடம் புதன்கிழமை மனு அளித்தனர். அதில் கனமழைக்கு செட்டில்மென்ட் பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன. இதில், அப்பகுதியில் உள்ள 18 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக குழுந்தைகளுடன் வசிக்க இடமின்றி தவித்து வருகிறோம். எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்கு வந்து வீடுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT