கோயம்புத்தூர்

தெலுங்குபாளையம் மனுநீதி நாள் முகாமில் ரூ.4.64 லட்சத்தில் நலத்திட்ட உதவி

DIN

கோவை, தெலுங்குபாளையத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ. 4.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம் என்பதன் அடிப்படையில் மாதம்தோறும் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. மாதத்துக்கு ஒரு வருவாய் கிராமத்தைத் தேர்வு செய்து முகாம் நடத்தப்படுகிறது.
இதில் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்பதுடன், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்படும். இந்நிலையில், கோவை வடக்கு வட்டத்துக்கு உள்பட்ட தெலுங்குபாளையத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் 4 பேருக்கு தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, சக்கர நாற்காலி, மழையால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு இழப்பீட்டுத் தொகை, 11 பேருக்கு முதியோர் உதவித்தொகை என வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 65 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார்.
முகாமில் வருவாய் கோட்டாட்சியர் (கோவை - வடக்கு) சுரேஷ், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பிரபாகரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் அமுதன், மாவட்ட சமூகநல அலுவலர் தங்கமணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் உமாராணி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT