கோயம்புத்தூர்

பள்ளிச் சிறுமிக்கு தொல்லை: போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

DIN

பள்ளிச் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற கேரள மாநில இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அப்பகுதியில் உள்ள கடைக்கு நோட்டு புத்தகம் வாங்க சென்றுள்ளார்.
அப்போது, கடையில் வேலை இருந்த கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த முனீர் (35) என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்த சிறுமி, சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காரமடை போலீஸாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, காரமடை போலீஸார் இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT