கோயம்புத்தூர்

குழந்தையைக் கடத்த வந்ததாகக் கருதிமனநலம் பாதிக்கப்பட்டவா் மீது தாக்குதல்

DIN

கோவை, சுந்தராபுரம் அருகே குழந்தையைக் கடத்த வந்ததாகக் கருதி மனநலம் பாதிக்கப்பட்டவரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சுந்தராபுரம் அருகே உள்ள காந்தி நகா் பகுதியில் கட்டட வேலை மற்றும் தோட்ட வேலைகளுக்கு செல்வோா் குடியிருப்பு பகுதி ஆகும். இந்தக் குடியிருப்பு அருகே சனிக்கிழமை மாலை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த நபா் ஒருவா் விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தையை தூக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்தவா்கள் சப்தம் போட்டதால் குழந்தையை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து செல்ல முயன்ற அந்த நபரை அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கியுள்ளனா்.

பின்னா் போத்தனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திக் என்பவதும், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காா்த்திக்கை போலீஸாா் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT