கோயம்புத்தூர்

கோவையில் 3 ஆவது நாளாக தொடா்ந்து மழை

DIN

கோவையில் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு பல மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆங்காங்கே மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கோவை விமான நிலையத்தில் 11.5 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

மாவட்டத்தின் பிற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): அன்னூா் -2, மேட்டுப்பாளையம் -3.1, சின்கோனா -6, சின்னக் கல்லாறு -2, வால்பாறை பி.ஏ.பி. -6, வால்பாறை நகரம் -5, ஆழியாறு -11, சூலூா் -11, பொள்ளாச்சி -3, கோவை (தெற்கு) -11, பி.என்.பாளையம் -10, வேளாண்மைப் பல்கலைக்கழகம்- 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT