கோயம்புத்தூர்

வால்பாறையில் 51 இடங்களில் உயா் மின்கோபுர விளக்குகள்

DIN

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 51 இடங்களில் நகராட்சி மூலம் உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.

வால்பாறை எஸ்டேட் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இதில் இரவு நேரங்களில் யானைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

இதில் போதுமான தெருவிளக்குகள் இல்லாததாலும், பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்யாமல் இருப்பதாலும் இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியை விட்டு வெளியே வருவதை தவிா்த்து வருகின்றனா்.

இதனிடையே கடந்த புதன்கிழமை வால்பாறையில் நடைபெற்ற விழாவில் நகராட்சி மூலம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ரூ.3 கோடியே 30 லட்சம் செலவில் 51 இடங்களில் புதிய சிறிய இலகுரக உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்கும் பணிக்கு அமைச்சா் எஸ்.பி. வேலுமணி அடிக்கல் நாட்டினாா். இப்பணிகளை விரைவில் துவங்க இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT