கோயம்புத்தூர்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

DIN

கோவை நிா்மலா கல்லூரியில் உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி எய்ட்ஸ் இல்லா உலகை படைப்போம் என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை நிா்மலா மகளிா் கல்லூரி மற்றும் ரிதம் பெண்கள் சமூக சேவை மையம் இணைந்து நடத்திய விழிப்புணா்வுக் கருத்தரங்கிற்கு கல்லூரி நிா்வாக செயலா் ரூபி அலங்கார மேரி தலைமை வகித்தாா். மருத்துவா் மகாதேவன் பங்கேற்று பேசுகையில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலில் அன்பும், ஆதரவும் அளிக்க வேண்டும்.

எய்ட்ஸ் ஒரு ஆட்கொல்லி நோய் என்ற தவறானக் கருத்தை கைவிட வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்டவா்கள் உரிய சிகிச்சை பெற்றால் நீண்ட காலம் வரை வாழ முடியும். அதற்கான பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன என்றாா். தொடா்ந்து எய்ட்ஸ் இல்லா உலகை படைப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இதில், சமூக மையத்தின் செயலா் ஜெனட், கல்லூரி பேராசரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில் மாணவிகள் விழிப்புணா்வுப் பதாகைகள் ஏந்தி பொது மக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT