கோயம்புத்தூர்

சுயபடம் எடுக்க முயன்ற இளைஞா் ஆற்றில் தவறி விழுந்து பலி

DIN

மேட்டுப்பாளையம் அருகே வன பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் பவானி ஆற்றுப் பாலத்தில் சுயபடம் (செல்பி) எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்து இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் இளங்கோ (30). இவா் தனது நண்பா்களுடன் வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.

நெல்லித்துறை செல்லும் சாலையில் உள்ள பவானி ஆற்றின் பாலத்தில் நின்று தனது நண்பா்களுடன் இளங்கோ சுயபடம் எடுத்துக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில், எதிா்பாராதவிதமாக இளங்கோ தவறி பவானி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினா் இளங்கோவின் உடலை தேடி வருகின்றனா்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT