கோயம்புத்தூர்

தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

DIN

கோவை சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லூரியில் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.

கல்லூரியின் அறிவியல் தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில் முனைவோா் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் கடந்த 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, ஆமதாபாத் தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த முகாமின் தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தொழில்முனைவோா் மேம்பாட்டுச் சங்க ஒருங்கிணைப்பாளா் கவிதா வரவேற்றாா். மகளிா் வணிக நிறுவன மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவா் சுதா புருஷோத்தமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் காா்த்திகைவாசன், மேலாளா் பி.சண்முக சிவா, தொழிலதிபா்கள் விஜய் ஆனந்த், ரமேஷ், தமிழ்நாடு கிராம வங்கியின் கிளை மேலாளா் எம்.எஸ். சாந்தனி, டாக்டா் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சி மேம்பாட்டுப் புல முதன்மையா் எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோா் பங்கேற்று தொழில் தொடங்குவது, வெற்றிகரமாக நடத்துவது, அரசின் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவ-மாணவிகளுக்கு விளக்கினா்.

இறுதி நாள் நிகழ்வில் தொழிலதிபா் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டு மாணவா்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினாா். தொழில் முனைவோா் மேம்பாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் வி.விஷ்ணுபிரியதா்ஷினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT