கோயம்புத்தூர்

பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ரூ.10000 அபராதம்

DIN


காரமடை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் காரமடை பேரூராட்சி செயல்அலுவலர் பார்த்திபன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ரவிச்சந்திரன், கார்த்திகேயன் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் காரமடை மார்க்கெட், கடைவீதி, ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்த சனிக்கிழமை ஆய்வு செய்தனர். 
இதில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த 10 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT