கோயம்புத்தூர்

வெள்ளிப்பாளையத்தில் பிடிபட்ட 2.85 மீட்டர் நீள மலைப் பாம்பு

DIN

மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிப்பாளையத்தில் பழைய இரும்புக் கடைப் பகுதியில் 2.85 மீட்டர் நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது.
மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட வெள்ளிப்பாளையம் சாலையில் பழைய இரும்புக் கடை உள்ளது.  இப்பகுதியில் கடந்த 7ஆம் தேதி முதல் பாம்பு  சீறும் சப்தம் கேட்பதாக  வருவதாக இப்பகுதியினர்  வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.  
இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் உத்தரவின்பேரில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.  அப்போது பழைய இரும்புக் கடை பகுதியில் சுமார் 2.85 மீட்டர் நீளமுள்ள மலைப் பாம்பு இருப்பதைப் பார்த்து  அதிர்ச்சியடைந்தனர்.  வனவர் ரவி தலைமையிலான வன ஊழியர்களுடன் சேர்ந்து ஒயிட் பாபு லாவகமாக மலைப் பாம்பைப் பிடித்தார். பின்னர் அதை  கண்டியூர் காப்புக்காடு வனப் பகுதியில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT