கோயம்புத்தூர்

சட்டவிரோதமாக மது விற்ற 60 பேர் கைது

DIN

கோவையில் விடுமுறை தினத்தன்று மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்ற 60 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டவிரோதமாக மது விற்பவர்கள் கைது செய்யப்படுவர் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 
ஆனால், இந்த உத்தரவையும் மீறி கோவை வெரைட்டி ஹால் ரோடு, சாய்பாபா காலனி, ராமநாதபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்ற 60 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 970 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT