கோயம்புத்தூர்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் அறிவுத் திருவிழா

DIN

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குமரகுரு தமிழ் மன்றம் இணைந்து நடத்தும் தமிழ் அறிவுத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் மழலைத் தமிழ் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. இதில் சரவணம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 180 பேர் கலந்துகொண்டனர். இதில் இவர்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, விநாடி வினா போட்டி, கட்டுரைப் போட்டி, திறன் வெளிப்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 
 நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று (ஜனவரி 19) வையத் தலைமை கொள் என்றத் தலைப்பில் தமிழ் ஆர்வலர்களின் பேச்சுத் தொடர், நிறைவு நாளான திங்கள்கிழமை (ஜனவரி 21) அருட்செல்வர் மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. 
இதைத் தொடர்ந்து நிறைவு விழாவில் விழா மலரும், குமரகுரு தமிழ் மன்றத்தின் ஒருபகுதியான தமிழ் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நித்திலம் அமைப்பின் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT