நேரப் பிரச்னை: பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதம்
சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் நேரப் பிரச்னையால் 2 பேருந்துகளை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள்
சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் நேரப் பிரச்னையால் 2 பேருந்துகளை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
உக்கடத்திலிருந்து இடையர்பாளையம் வரை செல்லும் தனியார் பேருந்தும், காந்திபுரத்திலிருந்து கண்ணம்பாளையம் வழியாக சூலூர் செல்லும் பேருந்தும் பாப்பம்பட்டிபிரிவில் வந்துகொண்டிருந்தபோது, நேரப்பிரச்னை காரணமாக 2 பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.